தமிழக, புதுச்சேரி மீனவர்கள், 10 பேர் அக்., 15ல் மீன் பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது, நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், மயிலாடுதுறை மாவட்டம், மானகிரி காசிராஜன் மகன் வீரவேல், 32, இடது பக்க அடிவயிறு, முழங்காலில் குண்டு துளைத்து காயமடைந்தார்.
இந்நிலையில் மீனவரை துப்பாக்கியால் சுட்ட , இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















