

ஒருங்கிணைந்த நகர்ப்புர வெள்ள மேலாண்மை திட்டம் – சென்னை கொசஸ் தலையாறு வடிநிலைப் பகுதி – மழைநீர் வடிகால் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இனைந்து நடத்தும் மாதவிடாய் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது குறித்த பிரச்சார நிகழ்ச்சி இன்று 25-6-2024 காலை 11 மணியளவில் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் ஜெய் கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது மாதவிடாய் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து பறை ஆட்டம் நிகழ்ச்சி மூலம் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு எடுத்துக்காட்டி, லயோலா கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் பறை ஆட்டம் ஆடி பாடல் பாடி பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1வது மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது மற்றும் இதில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்கள் மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் (SANITARY NAPKIN)யை உபயோகப்படுத்திய பிறகு அதை எவ்வாறு பாதுகாப்பாக குப்பையில் பிரித்து போடுவது, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியாளர்கள் ஆகியோரை கௌரவப்படுத்தும் வகையில் மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.இதில் ஜெய் கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. வெற்றி செல்வி மற்றும் அப் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
















