மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடு;

0
252

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் மின்னஞ்சல் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலிடம் பிடித்தவர்கள் விவரங்களும் இந்த தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here