சென்னை தண்டையார்பேட்டையில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி 6 அடி சிலிண்டர் மாதிரியை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது நூதன முறையில் சமைக்காத உணவுகளை பச்சையாக உண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் அப்போது பேசிய தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இனியவன் கூறுகையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் கடந்த ஒரு மாதத்தில் 80 ரூபாய் வரை விலை உயர்த்தி உள்ளதாகவும் மேலும் நாளுக்கு நாள் கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவதாகவும் இதேபோன்று வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையும் நாளுக்கு நாள் ஏறி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் பண்டைய கால மனிதர்களை போன்ற உணவுகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்த்தம் விதமாக தற்போது ராட்சச சிலிண்டர் வடிவிலான மாதிரியை வைத்து பச்சை உணவுகளை சாப்பிட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்ததாகவும் இதில் மத்திய அரசு உடனடியாக எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்
மேலும் தற்பொழுது ஊரடங்கால் சமையல் கலை தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற கேஸ் விலை உயர்வால் மேலும் பாதிப்படைந்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய்க்கு மிகாமலும் வர்த்தக ரீதியாக பயன்படுத்த கூடிய சிலிண்டர்களுக்கு 800 ரூபாய்க்கு மிகாமலும் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்
















