தற்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பலரும் வேலை இழந்து பாதிப்படைந்துள்ளனர் மேலும் வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பின்பற்றப்படுவதால் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதனால் தண்டையார்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ரேகா குளோரி என்பவர் தண்டையார் நகரில் வசிக்கும் மக்களுக்கு 1500 ரூபாய் மதிப்புடைய அரிசி மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்
இதில் ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கலந்துகொண்டு அத்தியாவசியப் பொருட்களை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கினார் தண்டையார் நகர் முதல் தெருவில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது நோய்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவும் முன்னிட்டு இது போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வரும் சமூக ஆர்வலர் ரேகா குலோரியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்














