*மர்ம நபர்களால்*
சென்னை மே 10 சேலையூர் எம்ஜிஆர் நகர் பாரத் மருத்துவ கல்லூரி அருகே வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் கோபாலகிருஷ்ணன் வயது 38 இவரது மனைவி மோகனவள்ளி இவருக்கு ஒரு பெண் பிள்ளை மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர் கடந்த 5 நாட்களாக ஆட்டோ ஒட்டாமல் இருந்து உள்ளார் நேற்றும் சவாரி சென்றுவிட்டு வருமானம் இல்லாததால் அவர்கள் வீட்டுக்கு வந்தவர் புழுக்கமாக இருந்ததால் சேலையூர் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள மரத்தடியில் காற்று வாங்க உட்கார்ந்துகொண்டு நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது 3 பேர் கொண்ட கும்பல் கோபாலகிருஷ்ணன் சரமாரியாக தலை,கை,கால், உடல் முழுவதும் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் ரத்தவெள்ளத்தில் கை துண்டான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மற்றும் சேலையூர் போலீசார் மீட்டு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் நேற்று இரவு வந்த கோபாலகிருஷ்ணனுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கவில்லை துண்டான கையை சேர்க்க முயற்சி செய்யவில்லை ரத்தப்போக்கு போய்க்கொண்டு உள்ளதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவமனையில் எந்தவித சிகிச்சையும் அளிக்க வில்லை என்று அவரது தாயார் மற்றும் உறவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர் கொரோனா தோற்று காரணமாக விபத்தில் அடிபட்டவர்கள் மற்றும் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருவதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு.
















