நீட் தேர்வை பொருத்தவரை மாணவர்களின் தற்கொலைகள் திமுகவையும் காங்கிரஸையும் தான் சாரும் அமைச்சர் ஜெயக்குமார்;

0
437

புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியில் முப்பதாம் ஆண்டு திருமலை திருப்பதி கொடை விழாவை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது செரியன்நகர் பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த சீனிவாச பெருமாள் திருவுருவப் படத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆராதனை காட்டி வழிபட்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் காசிமேடு கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்கள் மியன்மார் நாட்டில் பத்திரமாக இருப்பதாகவும் 50 நாட்களாக கடலில் இருந்ததால் மருத்துவர் குழு மூலமாக சோதனை செய்து பின்னர் இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்
மேலும் நீட் தேர்வில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் போடப்பட்டு இருந்தாலும் அன்றைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக ஏற்றுக்கொள்ளாமல் மறு ஆய்வு செய்வதற்கான மனு போட்டிருக்கலாம் ஆனால் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஆக்டைகொண்டு வந்தது ஏன் என்றும் மாணவர்களின் தற்கொலைக்கு காங்கிரசும் திமுகவும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்
அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் நலம் முழுமையாக பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here