காசிமேடு N4 மீன்பிடி துறைமுகத்தில் நண்பர்களோடு கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் மாயம் தீயணைப்புத்துறை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னை காசிமேட்டில் டி ஜி காலனி பகுதியை சார்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் தனது நண்பர்கள் ஆறு பேரோடு சேர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் படகுகள் கட்டும் இடம் அருகே குளித்துக் கொண்டிருந்த பொழுது விக்னேஷ் மட்டும் மாயமானார்
இதனைத் தொடர்ந்து விக்னேஷின் நண்பர்கள் அருகிலுள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர் மீனவர்கள் அருகிலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவலர்கள் விசாரணையில் டி ஜி காலனி பகுதி சார்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் இன்று தனது நண்பர்களோடு காசிமேடு கடற்கரைக்கு குளிக்க சென்றதாகவும் திடீரென தனது மகன் மட்டும் மாயமானது குறித்து புகார் அளித்தார் அலையின் வேகத்தால் விக்னேஷ் இழுத்துச் செல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பகுதிக்கு கரையொதுங்கி உள்ளாரா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அங்கு நிருத்தி வைக்கப்பட்டுள்ளது













