சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய பாதிரியாரை கண்டித்து திருவொற்றியூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்:

0
311

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களி்ல் சர்ச்சையை ஏற்படுத்தின. மத்திய அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசி உள்ளதாகவும் மேலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக அவரை கண்டித்து பாஜக வினர் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது பாஜக. வின‌ர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா திருவுருவப் படத்தை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here