சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து நிவாரண பொருட்களை வழங்கினார்:

0
342

*சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று அங்கு தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றி, நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து நிவாரண பொருட்களை வழங்கினார்*
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (Greater Chennai Police Rescue Team) ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, *சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்* காவல் அதிகாரிகளுடன் இன்று (28.11.2021), மதியம் *பூந்தமல்லி காவலர் குடியிருப்பு* வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், காவல் ஆணையாளர் அவர்கள், காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினர் தெரிவித்த குறைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை காவலர் குடும்பத்தினருக்கு வழங்கினார்.
தொடர்ந்து காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குடியிருப்பு வளாகத்திலுள்ள *W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு* சென்று பார்வையிட்டு, அங்கு காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி பாதுகாப்புடன் பணிபுரிய உத்தரவிட்டார்.
பின்னர், சென்னை பெருநர காவல் ஆணையாளர் அவர்கள் *குன்றத்தூர் காவலர் குடியிருப்பு* வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பின்னர் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைந்து தங்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்து, காவல் குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கினார். பின்னர் *T-13 குன்றத்தூர் காவல் நிலையம்* சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, அம்பத்தூர் துணை ஆணையாளர் திரு.J.மகேஷ்,இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.