பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பிரபாகரன். இவர் பாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஆட்டோ ஓட்டிவருகிறார்.அப்போது அவரது ஆட்டோவில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ஏறியிருக்கிறார். பாக்கியராஜ் அதே பகுதியில் டி.வி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வந்த ஆட்டோ பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது.ஆட்டோ மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதில் பின் சீட்டில் அமர்ந்திருந்த பாக்கியராஜ் தூக்கிவீசப்பட்டு, 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே, சர்வீஸ் ரோட்டில் விழுந்தார். இதைக்கண்டதும் ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன், உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பாக்கியராஜின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து பாக்கியராஜின் சகோதரர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்,பிரபாகரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ டிரைவர் பாடி மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் ஆக்சிலரேட்டரை கவனக்குறைவாக இயக்கியதில் அந்த ஆட்டோ மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. ஆட்டோ ஓட்டியபோது மது அருந்தியதும் தெரியவந்துள்ளது.
Home Uncategorized டிரைவர் மது அருந்தி ஆட்டோ ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ- அதில் பயணம் செய்தவர் பலி;
















