உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமேஸ்வரம் கோவிலில் வருகிற 17-ஆம் தேதி போராட்டம்:

0
465

உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமேஸ்வரம் கோவிலில் வருகிற 17-ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக விசுவநாதர் சன்னதி எதிரே உள்ள சிறப்பு தரிசன பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர் ஆனால் கடந்த சில வாரங்களாக உள்ளூர் பக்தர்கள் அந்தப் பாதை வழியாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் தடை விதித்தது கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து மக்கள் நலப் பேரவை சார்பில் வரும் 17ஆம் தேதி அன்று ஆலய பிரவேச போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் இதனிடையே ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியாளர் தலைமையில் இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது இதில் கோயில் இணை ஆணையாளர் துணை சூப்ரண்ட் மற்றும் மக்கள் நலர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிந்தது இதனால் வரும் 17 ஆம் தேதி அன்று மக்கள் நல பேரவை சார்பில் ராமேஸ்வரம் அனைத்து பொதுமக்களும் சேர்ந்துji கோயிலுக்குள் ஆலய பிரவேச போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here