பறக்கும் படை மற்றும் தேர்தல் பணிக்குழு- உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல்;

0
328

ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு அருகே பறக்கும் படை மற்றும் தேர்தல் பணிக்குழுவை சேர்ந்த சண்முகம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில், வேலூர் கஸ்பா பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன், வெங்கடேசன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, ஆற்காடு தாசில்தார் காமாட்சியிடம் ஒப்படைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here