காசிமேட்டில் மனிதம் பழகு அமைப்பினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் ;

0
370

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கில் அவதிப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவ மக்களுக்கு மனிதம் பழகு அமைப்பினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான முககவசம், சானிடைசர் மற்றும் புடவை, முட்டை போன்றவற்றை வழங்கினர்.

மனிதம் பழகு அமைப்பு சார்பில் சினிமா நடிகர் அன்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்பு கூறியதாவது,

சென்னையில் சுனாமி தாக்கியபிறகு வடசென்னையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். வர்தா புயல், தானே புயல் என அனைத்து பேரிடரிலும் எங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறோம். அதேபோல் இந்த கொரோனா காலத்தில் வாழ்வாதரத்தை இழந்து வாடும் 500 க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதில் ரோட்டரி கிளப் தலைவர் டி.எம்.பிரகாஷ், சினிமா நடிகர்கள் பிரபுதாஸ், தீனா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here