கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் வருவதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன,மாநகர காவல் துறையினர் கனரக வாகனங்கள் இயக்குவதை சூழலுக்கு ஏற்ப நெறிமுறைபடுத்த வேண்டும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார் .
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன்,லாரி உரிமையாளர்கள் சென்னை மாநகர காவல் துறை ஆணைய அலுவலகத்தில் கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் வருவதற்கு போடப்பட்டுள்ள விதிமுறைகளால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் இயக்குவதை முறைப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர் ….
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் …*
கொளத்தூரில் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து காலை 7 மணி முதல் 12 மணி வரை கனரக வாகனங்கள் மாநகர பகுதிக்கு வரக்கூடாது என மாநகர காவல் துறை சார்பில் உத்தரவு போடப்பட்டுள்ளது
ஆனால் போக்குவரத்து நெரிசலால் பல சமயங்களில் காலை 7 மணிக்குள் மாநகரப் பகுதிக்குள் வரும் கனரக வாகனங்கள் மீண்டும் வெளியேறும்போது காலதாமதமாகிறது , வாகனங்களை காவல்துறையினர் பிடித்து வைத்துள்ளனர்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது , கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது , கனரக வாகனங்கள் மாநகரப் பகுதிக்குள் இயக்குவதை முறைப்படுத்துவது அவசியம் ,
பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன அனைத்தையும் கடந்து பேசி சுமுக முடிவு எடுக்க வேண்டும் ,
பேட்டி – கமலக்கண்ணன். நிருபர்…விக்னேஷ்












