ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது:

0
393

வடசென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த, 14 வயது சிறுமி வயிற்று வலியால், தொடர்ந்து அவதியுற்று வந்துள்ளார்.

பெற்றோர், சிறுமியை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், அழைத்துச் சென்று பரிசோதித்ததில் சிறுமி ஆறுமாத கர்ப்பமாக இருப்பதாக, மருத்துவர்கள் கூறினர்

இதை கேட்டு
அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர்.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜசேகரன், 48, மவுண்ட் ரோடு, மின்வாரிய தலைமையகத்தில் உதவி தணிக்கை அலுவலராக வேலை பார்த்துவருகிறார்

சிறுமியின் வீட்டருகே உள்ள உறவினரை அவ்வபோது, ராஜ சேகரன் பார்க்க சென்றுள்ளார். அப்போது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில், மாடிக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில், ராஜசேகரனை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here