வேலூர் மாவட்டம் குடியாத்தம்
நகர பகுதியில் பொருத்தபட்ட 90 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததால் அதிகரிக்கும் குற்றசம்பவங்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை.
குடியாத்தம் நகரம் எப்போதும் நெரிசல் மிகுந்த நகரமாகும் குடியாத்தம் நகரை தாண்டி சில கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநில எல்லை தொடங்குகிறது இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள்,போக்குவரத்து வாகனங்கள் என குடியாத்தம் நகரின் வழியாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன மேலும் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக குடியாத்தம் நகரம் திகழ்கிறது இந்த நகரில் ஏராளமான நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், சிறு சிறு தொழிற்சாலைகள் என வர்த்தக நகரமாக உள்ளது மேலும் அதிக அளவு தீப்பெட்டி, பீடி,நெசவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது குடியாத்தம் பகுதி மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது இதனை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
குடியாத்தம் நகர காவல்துறையினர் குடியாத்தம் நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள், சிறு சிறு நிறுவனங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள் ,பொதுமக்கள் என அனைத்துத் தரப்பிரனர் பங்களிப்புடன் சுமார் 20 லட்சம் ரூபாய் கண்காணிப்பு கேமரா களுக்காக பொதுமக்கள் தாமாக முன்வந்து காவல்துறைக்கு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் 3 டி.விக்கள் மூலம் கேமராக்கள் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது சில மாதங்களாக சிறப்பாக இயங்கி வந்தது இந்த கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் துப்பு துலங்க பேருதவியாக இருந்து வந்தது இந்த
நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கண்காணிப்பு கேமராக்களில் சுமார் 90 கேமராக்கள் இயங்கவில்லை எனக்கூறப்படுகிறது குடியாத்தத்தில் சில மாதங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு, பட்ட பகலில் வீடு புகுந்து திருட்டு பெண்களிடம் தங்க சங்கிலி பரிப்பு என பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் செயல்படாது இதற்கு ஒரு முக்கிய காரணமாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருட்டுச் சம்பவம் நடைபெற்றாலும் கண்காணிப்பு கேமராக்களில் ஏதாவது ஒரு இடத்தில் குற்றவாளிகள் உருவங்கள் பதிவாகிறது ஆனால் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் துப்பு துலங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது காவல்துறை உயர் அதிகாரி இப்பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்தி செயல்படாத நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து உடனடியாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வணிகர்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.














