கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ் மாறன். மற்றும் துணை இயக்குனர் திரு.வேல் முருகன். ஆகியோரின் அத்துமீறலுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:

0
352

*12.01.2022*

*அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில்.*

*தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளருமான.*

*டாக்டர் நாஞ்சில் P.ரவி வெளியிட்டுள்ள.*

*பத்திரிக்கை செய்தி அறிக்கையில்.*

*தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்க்கு …*

*கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ் மாறன். மற்றும் துணை இயக்குனர் திரு.வேல் முருகன். ஆகியோரின் அத்துமீறலுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*

*தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.*

*கடந்த 2004 சுனாமிக்கு பிறகு தமிழகத்தில் மீன்பிடி தொழில் குற்றுயிரும் கொலையுயிருமாக ஐ.சி.யூ.வில் இருந்து வந்தது.*

*தற்போது வெண்டிலெட்டர் பொருத்தப்பட்டு நோயாளி போன்று கோமா நிலைக்கு சென்றுக்கொண்டு இருக்கின்றது.*

*இந்த நிலையில் வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போன்று*

*கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் திரு.தமிழ்மாறன். மற்றும் துணை இயக்குனர் திரு.வேல்முருகன்.இவர்கள் இருவரும் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை*

*இலங்கை கப்பற்படையின் துப்பாக்கி சூட்டிற்கு இணையான வேலைகளை, இந்த இரண்டு அதிகாரிகளும் செய்து சினிமா கதாநாயகன் என்று நினைத்து கொண்டு காமடி நடிகர் போன்று நடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.*

*கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி படகு கட்ட 20 லட்சம் முதல் 1கோடி வரை முதலீடு செய்துவிட்டு*

*ஒரு முறை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல சுமார் ரூபாய் 50ஆயிரம் முதல் 6லட்சம் ரூபாய் வரை டீசலுக்கும், ஐஸ்க்கும் மற்றும் இதர பொருட்களுக்கு செலவு செய்து மீன்பிடித்து வருகின்றார்கள்.*

*கடலில் இல்லாத ரோடுக்கு சாலை வரியும் கட்டிவிட்டு,*

*தரமான, சுவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்த மீன்களை உள்நாட்டு தேவைக்கு தந்துவிட்டு, வெளி மாநிலங்களுக்கு அனுப்ப மீன்களை தந்துவிட்டு, வெளி நாடுகளுக்கு அனுப்ப மீன்கள் தந்துவிட்டு, இதன் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவாணியும் ஈட்டி தந்துவிட்டு ,*

*மீனவன் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், வருமானம் இன்றி ஆண்டுக்கு ஆண்டு மீனவர்கள் தற்கொலை தொடர்ந்து கூடுதல் நடக்க இப்படிப்பட்ட சில பொறுப்பற்ற அதிகாரிகளே காரணம்.*

*கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளதுறை உதவி இயக்குனர் திரு.தமிழ்மாறன். மற்றும் துணை இயக்குனர் திரு. வேல் முருகன். இவர்கள் இருவரும்*

*தமிழக கடலூர் மீனவர்களை குற்றப்பரம்பரை உடையவர்கள் போன்று நடத்துவதும்.*

*இவர்கள் இருவர் விருப்பத்திற்கு மீன்வர்கள் மீது தான்தோன்றி தனமாக காவல் துறையில் புகார் கொடுத்து தண்டனை வாங்கி கொடுப்பது. அல்லது இவர்களாகவே மீனவர்களுக்கு தண்டனை கொடுப்பது.*

*தமிழகத்தில் மினி இலங்கை இராணுவம் இவர்கள் தான் என்ற தோற்றத்தை கடலூர் மீன்வளத்துறை நடத்தி வருகின்றதை காட்டுகின்றது.*

*மீன்வளத்துறை அதிகாரிகள். யாருக்காக பணிபுரிகின்றார்கள். என்பது அவர்களுக்கே தெரியவில்லை,*

*அதிகாரிகளுக்கு யார் சம்பளம் கொடுக்கின்றார்கள். என்பதாவது தெரிந்தால் இப்படி மீனவர்களை திருடர்கள் போன்று சிறைபிடிப்பது, மீனவர்கள் பொருட்களை பறிமுதல் செய்வது. மீனவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவது, மீனவர்கள் மீது தண்டவரி விதிப்பது, மீன்பிடிக்க தடைவிதிப்பது.*

*டீசல் மானியத்தை ரத்து செய்வது, மீன்பிடி படகுகளுக்கு தலா 8000/ ரூபாய் 10000/ரூபாய் என அபராதம் விதித்து இந்த கொரோனா நேரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டு இவை அனைத்தையும் ஒன்றும் விடாமல் செய்து விட்டு மேல் அதிகாரிகளுக்கும்,அரசுக்கும் தவறான தகவல்களை சொல்லி சம்பளம் தரும் மீனவனை குற்றவாளியாக்கி குளிர்காய்ந்து வரும் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் திரு.தமிழ்மாறன். மற்றும் துணை இயக்குனர் திரு.வேல்முருகன். இவர்கள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.*

*பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவ தொழிலாளர்களுக்கும், விசைபடகு உரிமையாளர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ள இழப்பீட்டுக்கு இவர்கள் இருவரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்* .

*எத்தனை நல்ல திறமையான அரசங்கம் வந்தாலும் இவர்களை போன்ற ஒரு சில பண வேட்டை, சுயநல அதிகாரிகளால் நல்ல அரசங்கத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.*

இந்த அதிகார துஷ்பிரயோகம் இன்று கடலூருக்கு, நாளை சென்னைக்கு, அடுத்த வாரம் நாகப்பட்டினத்திற்கு, அடுத்த மாதம் ராமேஸ்வரத்துக்கு அடுத்த இரண்டாவது மாதத்திற்கு தூத்துக்குடிக்கும் அதுக்கு அடுத்த மாதத்திற்கு கன்னியாகுமரிக்கு என்று இந்த நிலமை வராமல் இருக்க மீனவர்களே விழிப்பாய் இருங்கள்.

*அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here