எம்ஜிஆரின்106 வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தத்தில் நூறு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

0
265

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை காளியம்மன் கோவில் மண்டபத்தில் புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர், புரட்சித்தாய் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் சேர சோழ பாண்டியன் அறிவுறுத்தலின்படி மாநிலச் செயலாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்டச் செயலாளர் சௌந்தர் முன்னிலையில் வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள்
அ.தி.மு.க., முன்னாள் எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான நரசிம்மன்,அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் L.K.M.B. வாசு திருத்தணி எம்ஜிஆர் தொண்டரணி செயலாளர் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டு 100 பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினர்.நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்டத் தலைவர் இளங்கோ மற்றும் மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் மணி நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here