




அரசு நகர்ப்புறம் 13 துறைகள் 43 சேவைகள் திட்டங்களை உங்களின் இல்லங்களுக்கு சென்று உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி வார்டு 4 – 11-9-2025 புதன்கிழமை காலை 9மணியளவில் தொடங்கப்பட்டது.இதில் ஏராளமான அப் பகுதி மக்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளான குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உதவித்தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளக்கு மனு அளித்து 45 நாட்களில் தீர்வு காணும் முகாமில் கலந்துகொண்டு அந்தந்த துறைகளின் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினார்கள் . இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் சென்னை மாநகராட்சி 1வது
மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு
4வது வார்டு மாமன்ற உறுப்பினர் இர.ஜெயராமன். திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வை.ம. அருள்தாசன் Bsc.Bl. கழக பொதுக்குழு உறுப்பினர் இரா.முருகேசன். 7,வது வட்டச் செயலாளர் கா.கார்த்திகேயன் மாநகராட்சி மண்டல அலுவலர் பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டு உடனடியாக தீர்வு காணும் வகையில் சரி செய்து தரும்படி அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.















