திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது;

0
266

தன்னை விட ஒருவன் முன்னேறி செல்வதைப் பார்த்து பெருமைப்படும் ஒரே இனம் ஆசிரியர்கள் மட்டுமே. அவர்கள் தான் தன்னலம் பாராமல் பொதுநலத்திற்காக உழைப்பவர்கள்.

அவர்களுக்கு விருது கொடுத்து கௌரவிப்பது அவர்களின் சேவைகளை ஊக்குவிக்க உதவும். வருகின்ற செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்திற்காக ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவரின் கைகளால் கொடுக்கப்படும்.

நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர்களும் இதில் அடங்குவர். உடுமலையைச் சேர்ந்த பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியரான திருமதி. விஜயலட்சுமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
உடுமலையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் பெருமை.ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்களுக்கு பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தினார்கள்

(நிருபர் ஆனந்தகுமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here