இலக்கிய செல்வர் ஐயா குமரி அனந்தன் மறைந்தார். சுதந்திர போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த தமிழ்க் காதலர் இவர். இலக்கிய செல்வர் என அனைவராலும் போற்றப்பட்ட குமரி அனந்தன் 25-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். தருமபுரியில் பாரத மாதாவிற்கு கோவில் கட்ட வேண்டும், நதிகள் இணைப்பு, பனை மரத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட பல மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளையும் மேற்கொண்ட ‘தகைசால் தமிழர்’ இவர். தொடர்ந்து மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வந்த ஐயா குமரி அனந்தன் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும்.















