தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி பலையகாரன் தெருவை சேர்ந்த பலேயகாரன் மகன் அண்ணாமலை வருக்கு சொந்தமான கோழிப்பண்ணை மேட்டூர்-கடவாக்காடு செல்லும் சாலையில் உள்ளது.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் சுமார் 135 மூட்டைகளில் பல்வேறு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த அண்ணாமலையின் சகோதரர் திருமலைக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.















