திருவொற்றியூர் காலடிபேட்டையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணி-அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு:

0
558

திருவொற்றியூர் காலடிபேட்டையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணிகள் 2009 துவங்கப்பட்டு மிகவும் மந்தமாக ஏறக்குறைய 13 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நமது திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்கள் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன்

பி.கே.சேகர்பாபு அவர்களை தொடர்பு கொண்டு இந்த கோயிலின் திருப்பணிகளை வேகமாக முடித்து கும்பாபிஷேகம் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று ஆலயத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார் பணிகளை வேகமாக முடித்து விரைவில் கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறநிலை துறை அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் எஸ்.சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்களும் அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு *கண்ணன்* உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here