இராமேஸ்வரம் சம்பை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு வயது 33. இவரது மனைவி விமலா வயது 28. இவர்களது மகள் தியா ஸ்மிதா 3 வயது. பிரபு வீடு கான்ட்ராக்ட் வேலை செய்து வந்தார். இதில் திடீரென கடன் ஏற்பட்டதால் பிரபு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார் அன்று மாலை விமலா வீட்டை பூட்டிக்கொண்டு தனது மகள் தியா ஸ்மிதாவை தூக்கில் போட்டு விட்டு அவரும் தூக்கு போட்டு கொண்டார். இது பற்றி அறிந்த விமலாவின் உறவினர்கள் தாயும் குழந்தையையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் குழந்தை ஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் விமலா இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர் இச்சம்பவம் இராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து வருவாய் அதிகாரிகள் மற்றும் இராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்
















