மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம்;

0
203

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஜான்சி ராணி தலைமை வகித்தார் ஜெயச்சந்திரன், வாணி, நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த போராட்டத்தில் வடசென்னை மத்திய சென்னை தென் சென்னை சேர்ந்த நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர் அப்போது அவர்கள் கோரிக்கை குறித்து கூறியது மாற்றுத்திறனாளிகள் மாதம் தோறும் அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையை விண்ணப்பித்து 14 மாதங்கள் ஆகியும் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை மாற்றுத்திறனாளிகளுஏஏஒய் ரேஷன் கார்டு வழங்கிடவும், வீடு இல்லா மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக வீடு வழங்கிடவும், விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர் மாற்றுத்திறனாளிகள் ஒப்படைக்கும் போராட்டம் குறித்தும் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here