திருப்பூர் மார்ச் 26,
திருப்பூர் தெற்கு பகுதியிலுள்ள ஏ பி டி ரோட்டில் நகரம் தெற்கு மற்றும் டவுன்ஹால் ஆகிய இரண்டு, மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.
இதில் டவுன்ஹால் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சண்முகவடிவேல்-32 என்பவர் மின் ஊழியராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார் அவருக்கு திருமணாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது.
டவுன்ஹால் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதிகளிலுள்ள காமராஜ் சாலையில் முறையாக பராமரிக்காததால், மின்கம்பத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்து, இரும்பு கம்பி வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து விழும் அபாய நிலையில் மின் கம்பம் இருந்துள்ளது
இந்நிலையில் இன்று காலை மேற்படி திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் பகுதிகளிலுள்ள காமராஜ் சாலையிலுள்ள பழுதடைந்த மின் கம்பத்தில் மின்பழுது ஏற்பட்டது. இதையடுத்து அதை சரிசெய்ய அங்கு வந்த மின்வாரிய ஊழியர் சண்முக வடிவேல்-32 மின் தடையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின் கம்பம் கீழே முறிந்து விழுந்ததால் சாலையின் இரு புறங்களிலும் மின்சார ஒயா்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதில் மின் ஊழியர் சண்முகவடிவேலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஊத்துக்குளி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே செய்து தொடர்ச்சியாக திருப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டால் வழக்கு பிரச்சனை வருகின்ற நிலையில் அவசர அவசரமாக அவரது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அவசர அவசரமாக அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து உரிய வழிமுறையாக விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் கூறுகையில் திருப்பூரிலுள்ள பல்வேறு இடங்களிலுள்ள பல மின்கம்பங்கள் இதே போல் மோசமான நிலையில் இருப்பதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்து கொடுக்கவும் பணியின் மின் கம்பம் முறிந்து விழுந்து படுகாயமடைந்த ஊழியருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கவும் உரிய நிவாராணம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.














