குடியாத்தம் நகர தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை மற்றும் அரசு மருத்துவமனை குடியாத்தம் இணைந்து நடத்திய மகளிருக்கான இரண்டாவது புற்றுநோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ விழிப்புணர் முகாம் அறக்கட்டளையின் வேலூர்மாவட்டத்
தலைவர்ப.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.நகர துணைத்தலைவர் என்.ராஜா அனைவரையும் வரவேற்றார்.
இம்முகாமில் ஐம்பது பெண்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் நகர மன்ற தலைவர் திரு. எஸ் சௌந்தர்ராசன், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி
தாளாளர் திரு வி. சடகோபன், குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு மா.மாறன் பாபு. ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்கள். முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற துணைத் தலைவர் திருமதி பூங்கொடி மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர் திரு ஆட்டோ மோகன், பல் மருத்துவர். த .தமிழ்மதி லிட்டில் பிளவர் பள்ளி செயலாளர் திருமதி. ரம்யா கண்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
பி தனபாலன், ஜெ.தமிழ் செல்வன் மற்றும் தொழிலதிபர் ஏ.வி. மகாலிங்கம், தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் மாநில தலைவர் பி. கார்த்திகேயன் செயலாளர் எஸ் சுரேஷ், மாநில பொருளாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி
அமைப்புச் செயலாளர் க.சையத்
அலீம்,சட்ட ஆலோசகர்
வழக்கறிஞர் R.E.சரவணக்குமார்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகர தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை நகர துணைச் செயலாளர் ஆர்.தனசேகரன் நகர ஆன்மீக அணி அமைப்பாளர் எஸ். சிவஞானம் ஆகியோர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர். முடிவில் நகர செயலாளர் டி சிவக்குமார் நன்றியுரை ஆற்றினார்.









