திருவொற்றியூர் சாத்துமா நகர் 13வது வட்டத்தில் அமைந்துள்ள கன்னிகா குருகுலம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 17-3-2025 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக :திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர், கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு, பகுதி துணை செயலாளர் திரு.எம்.வி.குமார், 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.ரா.சுசிலா ராஜா, தலைமை ஆசிரியர் இந்துமதி 13வதுவட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் அப்பள்ளி மாணவிகள் நடன நிகழ்ச்சி, நாடகம் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அரங்கேற்றினர், இதனை சிறப்பு அழைப்பாளர்கள் கண்டு ரசித்து அவர்களை பாராட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.இதில் திருவொற்றியூர் கிழக்குபகுதி துணை செயலாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் கே.பிரபாவதி T.K.அசோகன் K.V. ஸ்ரீதர் மற்றும் கழகத் தோழர்கள், அப்பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.