யானைப்படத்தின் திரைப்பட இயக்குனர் திரு.ஹரி அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்-யானைப்படத்தின் திரைப்பட இயக்குனர் திரு.ஹரி அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்,

0
278

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்!!! யானைப்படத்தின் திரைப்பட இயக்குனர் திரு.ஹரி அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்!
தொடர்ந்து பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடங்களாக கருதப்படும் கடற்கரைகளில் சினிமா படம் எடுக்கிறேன் என்ற போர்வையில் படப்பிடிப்பை நடத்திவிட்டு பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும்.மீன்பிடித் தொழிலையும் மீனவர்களின் வாழ்க்கை தரத்தையும் மிகவும் மோசமான முறையில் பாரம்பரிய மீனவர்கள் என்றால் ஆள் கடத்தல் காரர்கள், குழந்தை கடத்தல் காரர்கள், கொலைகாரர்கள், ரவுடித்தனம் செய்யும் வில்லன்கள் போன்றும் இவர்கள் பிற சமூகங்களை ஒப்பிடும் பொழுது பிற சமூகங்களால் அடக்க கூடியவர்கள். பிற சமூகங்கள் இவர்களை அடக்கியாளக்கூடிய சமூகங்கள் போன்ற தவறான சித்தரிப்பை இயக்குனர் திரு.ஹரி அவர்கள் தான் சார்ந்த இனத்தை கௌரவமான இனமாகவும் பாரம்பரிய மீனவர் இனத்தை தாழ்வான இனமாகவும் பல படங்களில் சித்தரித்து படம் இயக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். இது அவருடைய ஜாதி வெறியை எடுத்துக் கூறக்கூடிய வகையில் அவரின் அனைத்து படங்களும் அமைந்துள்ளது. ஏற்கனவே வெளிவந்த சிங்கம் படம் இதே பாணியில் பாரம்பரிய மீனவர்களை கடத்தல் காரர்களை போல் சித்தரித்து அவர்களை அடக்கி வைக்கக்கூடிய கதையாக படம் எடுக்கப்பட்டது. தற்சமயம் வந்துள்ள யானை படமும் பாரம்பரிய மீனவர்களின் தொழில் முறைகளையும் பாரம்பரிய மீனவர்களை இனரீதியாக கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் படம் எடுத்துள்ள இயக்குனர் திரு.ஹரி அவர்களை இந்திய மீனவ சங்கத்தின் சார்பாக மிகவும் பரதவர் முன்னேற்றப் பேரவையின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்! யானை திரைப்பட இயக்குனர் திரு ஹரி அவர்கள் இதற்கு விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கேட்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் கடற்கரை ஓரங்களில் சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் பரவி வாழும் பாரம்பரிய மீனவர்களின் கிராமங்களான 608 மீனவ கிராமங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என இத்த தகவலின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த முறை வடசென்னை படம் வெளிவந்து அதில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததன் அடிப்படையில் இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்கள் பல காட்சிகளை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை போல் இயக்குனர் திரு.ஹரி அவர்களும் இந்த படத்திலும் மேற்கொண்டு அவர் எடுக்க விற்கக்கூடிய படங்களிலும் பாரம்பரிய மீனவரினமான பரதவர் மக்களை ஜாதி ரீதியாக கொச்சைப்படுத்தக்கூடிய செயல்களை செய்யக்கூடாது. என இந்திய மீனவர் சங்கத்தின் சார்பிலும் பரதவர் முன்னேற்றப் பேரவையின் சார்பிலும் கடுமையான கண்டனத்தை இத் தகவலின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே கடந்த 09/03/ 2022 அன்று தமிழக முதல்வர் அவர்களுக்கும், திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கும்,
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அவர்களுக்கும், இது சம்பந்தமாக கடற்கரை ஓரங்களில் பாரம்பரிய மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன அதை தடுக்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளோம். இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக இந்த அறிக்கைக்கு யானை பட இயக்குனர் திரு. ஹரி அவர்கள் விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும். இனி வரும் காலங்களில் எந்த திரைப்படமும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்க கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகளுடன்.
டாக்டர்.எம்.டி.தயாளன் பரதவர்.
தலைவர்.
இந்திய மீனவர் சங்கம் மற்றும் பரதவர் முன்னேற்றப் பேரவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here