*தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கத்தின் 93வது பொதுக்குழு கூட்டம் 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.மணியளவில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள காமாட்சி மீனாட்சி திருமண மஹாலில் நடைப்பெற்றது.*
*பொதுக்குழுவில் தலைவராக G.R.அப்பாராஜ் அவர்களும் .*
*செயலாளராக AGR.கோவிந்தராஜ் அவர்களும்,*
*பொருளாலராக திருவண்ணாமலை K.சுப்பிரமணி அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்*
அதனை தொடர்ந்து
*அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி, M.சுப்பிரமணி, S.முருகன்,E.சேகர் ஆகியோர் இணைந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் G.R.அப்பாராஜ் அவர்களுக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்தார்கள்*
*அதனை தொடந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மீனவ சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள், ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் சால்வை, மலர் மாலை அணிவித்தும் அரசுக்கு நன்றி தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகள் வைத்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.*
*பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.*
1. *ஏரி, குளம், குட்டைகளில் மீன் பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் .*
2. *அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அறங்காவலர் குழு உறுப்பினராக மீனவர்களை நியமிக்க வேண்டும், வடம் பிடித்து இழுக்கும் முதல் உரிமை மரியாதையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும்.*
3. *மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த ஆட்சி காலத்தில் உள்நாட்டு மீனவர் போளூர் சீனிவாசன் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டு மீனவரான மா.சுப்பிரமணி அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்கு வாய்ப்பு வழங்கி சுகாதாரத்துறை அமைச்சராகவும் காபினட் அந்தஸ்துக்கு உயர்த்திய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பொதுகுழு கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*
4. *மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் பாரம்பரிய மீனவர் ஒருவரை தமிழ்நாட்டினுடைய மீன்வளத்துறை அமைச்சராக ஆகும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம் .*
5. *ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக நிதிகளை ஒதுக்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது.*
6.*மழை காலங்களில் ஏரி, குளம், குட்டைகள் முழுவதுமாக நிரம்பி விடுவதால் அதில் மீன் பிடிக்க முடியாமல், அதை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது, எனவே அப்படிப்பட்ட மழைக்காலங்களில் அதை நம்பி இருக்கும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மீனவ குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது .*
7. *இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே 1931ஆம் ஆண்டு இந்த தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் உருவாக்கப்பட்டது அதனுடைய பொதுக்குழு கூட்டத்தில் என்னை தலைவராக தேர்வு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு மிக விரைவாக தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கத்தின் மாநில மாநாடு சென்னையில் நடைபெறும் அதில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது*
அதை தொடர்ந்து.
*செயல் தலைவராக கடலூர் K.கனகசபை அவர்களும்.*
*துணை தலைவர்களாக திரு.S.T.முத்து மாணிக்கம் அவர்களும். Y.P.K.சம்பத் அவர்களும்.கடலூர் திரு.லெட்சுமணன் அவர்கள்.*
*இணை பொதுச்செயலாளராக திரு.குமரேசன் அவர்களும், திரு.தேவராஜ் அவர்களும்.*
*அமைப்பு செயலாளராக திரு.அன்பழகன் அவர்களும்.*
*கொள்கைபரப்பு* *செயலாளராக திரு.சட்டநாதன் அவர்கள்*
மற்றும்
*திரு.A.V.ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.*
- *தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம்.(பதிவு எண்.S.1of 1931-1932)*













