நாய்களின் கதி என்ன உயிரோடு திரும்புமா என்று சமூக மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் எதிர்பார்ப்பு;

0
338

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் அழகர்மலை காட்டுக்கு அருகில் உள்ள கிராமத்தில் வியாழக்கிழமை மாலை நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் கிராமத்தை சுற்றிலும் இருந்த தெரு நாய்களை சட்டத்திற்கு விரோதமான முறையில் நாய்கள் கழுத்தில் இரும்பு கொரோடா போன்ற ஆயுதத்தை வைத்து கழுத்தை நெருக்கி  தர தர வென இழுத்து சென்று டாட்டா ace  போன்ற வாகனத்தில் நாய்களை தூக்கி எரிந்து கொண்டிருந்தனர் அப்பொழுது இதை கண்ட கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் அந்த நாய் பிடிக்கும் கும்பலை பார்த்து ஏன் இப்படி துடிக்க துடிக்க பிடித்து செல்கிறீர்கள் என்று போனில் வீடியோ எடுத்தவாரே கேட்டனர் அதற்கு அவர்கள் அவர்களை மிரட்டிவிட்டு சரியான பதிலளிக்காமல் தங்கள் இழுத்துச்சென்று மயக்கத்திலிருந்த நாய்களை தாங்கள் கொண்டு வந்த வண்டியில் தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். மேலும் இதை பற்றி விசாரித்ததில் அவர்கள் பிடித்த 43 நாய்களையும் அருகில் உள்ள அழகர் மலை காட்டில் விட்டதாகவும் அதை அந்த ஊர் கவுன்சிலர் கூறியவாறு செய்ததாகவும் தெரிகிறது.மேலும் பிடித்த43 நாய்களை திருப்பி எடுத்து வர வேண்டும் என்று கூறியதற்கு திரும்ப அழைத்து வருவதாக ஏ ஓ கூறினார் பிடித்து சென்ற நாய்கள் அனைத்துமே தொண்டை இறுகி மூச்சு விடமுடியாமல் மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டது நாய்களின் கதி என்ன உயிரோடு திரும்புமா என்று அங்கிருந்தவர்களும் சமூக மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேலும் நாய்களை பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் காண்போரை   கண்கலங்க வைத்திருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here