சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(25), ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் இவர் மனைவி உமா மகேஷ்வரி, ராயபுரம், என்.என் கார்டன் பகுதியில் தனியார் நிறுவனத்தில், கணக்காளர் பணிபுரிகிறார் இந்த நிலையில் தம்பதியர் இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விடுவர். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற தம்பதியினர், வீட்டை பூட்டி விட்டு வாசலில் உள்ள சாமி படம் முன்பு சாவியை வைப்பது வழக்கம் மாலை வேலை முடித்தவுடன் கணவன் மணி இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வந்துள்ளனர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பீரோவில் இருந்த இரண்டு சவரன் நகை , 350 கிராம் வெள்ளி நகை மற்றும் 10,000ஆயிரம் பணம் கொள்ளையடிக் கப்பட்டிருந்தது. உடனே தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தம்பதியர் வேலைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை சாமி படம் முன்பு வைத்திருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் அந்தச் சாவியை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பீரோவை உடைத்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து அத்த திருநங்கை தேடும் பணியில் தண்டையார்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளை என்னை தேடி வருகின்றனர்
















