கள்ளக்காதலியை அவரது மருமகனோடு சந்தேகப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி ;

0
286

சென்னை ஓட்டேரி ராமானுஜம் கார்டன் பட்டாளம் பகுதியில் சேர்ந்தவர் செல்வி (45) இவருக்கும் இவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இவர் கணவரை பிரிந்து 25 ஆண்டுகளாக தன் மகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர் இந்நிலையில் செல்வியின் மகள் நாகவல்லிக்கும் டில்லி பாபு என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர் டில்லி பாபு அனைவரிடத்திலும் சகஜமாக பேசி பழகக்கூடிய ஒரு நபராக அப்பகுதி முழுவோம் சுற்றி வந்தார் தன் மாமியாருடனும் அதேபோல பழகி வந்தார் இதை தவறாக ஏற்றுக் கொண்ட சுப்பிரமணி இது தொடர்பாக செல்வியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் டில்லிபாபு உடன் செல்வி தொடர்பில் இருப்பதாக சந்தேகம் அடைந்த சுப்பிரமணி செல்வியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தானும் எரித்து கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இன்று ஓட்டேரி பகுதியில் உள்ள செல்வியின் வீட்டிற்கு வந்து செல்வியின் மீது பெட்ரோல் ஊற்றிவிட்டு தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார்

இந்த நிலையில் செல்வி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் எரிந்து கொண்டிருந்த பார்த்து டில்லி பாபு அணைக்க முயற்சி செய்துள்ளார் அப்பொழுது டெல்லி பாபுவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூவரையும் காப்பாற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதில் செல்வி அதிகம் தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மேலும் சுப்ரமணி டில்லி பாபு ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவத்தை குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here