ஜூன்21சென்னை,திருவொற்றியூர்,திரு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பத்மா(45), இவர் அக்கு பஞ்சர் தெரபிஸ்ட், இவரது கணவர் முருகன், ஓமன் நாட்டில் கிரேன் ஆபரேட்டர். இவர்களின் மகன்கள் நித்தேஷ்(20), இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி தர பகுப்பாய்வு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சஞ்சய்(14),இவர் 10ம வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி அன்று அருகில் வசிக்கும் பெரியம்மா வீட்ட்ற்கு நித்திஷ் சென்றுள்ளார். அங்கிருந்து அவரது மொபைல்போன் வாயிலாக பெரியம்மா மகள் மகாலட்சுமியின் வாட்சப்பில் தனது வீட்டில் சந்தேகமாக உள்ளது. நீ உடனடியாக வீட்டிற்கு சென்று என்னவென்று பாருங்கள் என பதிவிட்டு இருந்தார். இதையடுத்து நித்திஷ், அவரது மொபைல்போன் மற்றும் கதவின் சாவியை அவரது வீட்டு வாசலில் ஒரு இடத்தில் வைத்து விட்டு மாயமாகி விட்டார். நேற்று காலை மகாலட்சுமி அவரது மொபைல்போனில் வாட்சப்பில் பார்த்தபோது நித்திஷ் அனுப்பிய தகவலை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினரை அழைத்துக்கொண்டு மகாலட்சுமி, பத்மா வீட்டிற்கு சென்றார். அங்கு வசாலில் இருந்த சாவிமூலம் வீட்டின் கதவை திறந்தார். உள்ளே சென்றபோது துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த மகாலட்சுமி உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். வீட்டுக்குள் பாலிதீன் கவரில் பத்மா மற்றும் சஞ்சய் உடல்கள் சுற்றபப்ட்டு கிடந்தன. பாலிதீன் கவரை பிரித்து பார்த்ததில் இருவரும் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை கண்டு மகாலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின், போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து கொலை செய்யப்பட்ட காய்கறி நறுக்கும் கத்தி மற்றும் நித்திஷ் மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் தீவீர தேடுதலில், கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த நித்திஷை கைது செய்தனர்.படிக்க சொன்னதால் கொன்றேன்;நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். என் தந்தை ஓமன் நாட்டில் வேலை பார்க்கிறார். என் தாய் அக்கு பஞ்சர் தெரபிஸ்ட், என் தம்பி 10ம வகுப்பு படிக்கிறார். எனக்கு நண்பர்கள் அதிகம் , ஒரு வித போதை பழக்கம் உள்ளது. இதனால் எனக்கு படிப்பு சரியாக வரவில்லை. 14 அரியர் பேப்பர் வைத்துள்ளேன். வீட்டில் இருக்கும் போதெல்லாம் என் தாய் என்னை கேவலமாக திட்டுவார். அரியர் பேப்பர்களை முடிக்காவிட்டால் வீட்டில் இடம் இல்லை என கூறுவார். என் தம்பி என்னை கிண்டலடித்தார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஒரு முறை நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.என் நண்பர்கள் சமாதானப்படுத்தி என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் அப்போதும் என் வீட்டில் நிம்மதி இல்லை. என் தயா என் தம்பி மீது அதிகம் பாசம் வைத்திருந்தார். தூவும் என ஒரு வித மனவேஇதனால் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். தாய்-தம்பி உயிரோடு இருந்தால் தானே என்னை படிக்க சொல்லி துன்புறுத்துவீர்கள். கொலை செய்தால் என்ன என நினைத்தேன். சம்பவத்தன்று வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் முதலில் என் தம்பியை குத்திக்கொன்றேன். அதை தடுக்க வந்த என் தாயையும் கொடூரமாக கொலை செய்தேன். பின் அவரது இரு உடல்களை பாலிதீன் கவரில் சுற்றி வைத்து, ஒன்றும் தெரியதாது போல் என் பெரியம்மா மகள் அக்கா மகாலட்சுமிக்கு வாட்சப்பில் தகவலை அனுப்பிவிட்டு தலைமறைவாகி விட்டேன். கடற்கரையில் பதுங்கி இருந்தபோது, போலீசார் கைது செய்தனர்.இவ்வாறு வாக்கும் மூலம் கொடுத்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.