தண்டையார்பேட்-
வீட்டில் விளக் ஏற்றி வைத்து விட்டு கோவிலுக்கு சென்றவர் வீட்டில் தீ விபத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை எம் எம் திரையரங்கம் எதிரில் வசிப்பவர் செல்வம் தொழிலதிபர் மூன்று மாடி வீட்டில் தமது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அவர் வீட்டிலிருந்து புகை வந்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்
அப்பகுதியில் மெட்ரோ பணி நடப்பதால் தீயணைப்பு வாகனம் உள்ளே வர முடியாத சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டு தீயணைப்பு வீரர்கள் நீண்ட தூரம் தீயணைப்பு பைப்புகலை கொண்டு வீட்டுக்குள் சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
பின்னர் விசாரணையை செய்தபோது இன்று காலை வீட்டில் உள்ள மரத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து சாமி கும்பிட்டு விட்டு இவர் இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு கோயிலுக்குச் சென்றதாகவும் வீட்டிலிருந்த விளக்கின் ஏற்பட்ட தீயினால் பூஜை அலங்கார அறை மற்றும் அருகில் வைத்து இருந்த நாற்காலி மேஜை ஏசி உள்ளிட்டவைகளில் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில் வீட்டில் உள்ள அறையில் இருந்து புகை மூட்டம் வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பேரில் தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீச்சி அடித்து ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதில் வீட்டின் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, பிரிட்ஜ், மேசை, நாற்காலி, உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












