புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை மற்றும் கஞ்சா வியாபாரி சீனிவாசன் என்கின்ற அருப்பு சீனு நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சீனிவாசன் (34) என்கின்ற அருப்பு சீனு, இவரை சமீபத்தில் கஞ்சா வழக்கில் மதுரவாயல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இந்நிலையில் நேற்று அவரது மனைவி ஜான்சிராணி நேற்று மனு கொடுத்து சந்தித்த நிலையில் மாலை 4 மணி அளவில் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் என்கின்ற அறுப்பு சீனு உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் அவரது மறைவிற்கு தெரிவிக்கப்பட்டது இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் இறந்ததாக கூறி காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து எந்தவித தகவலும் சீனிவாசனின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் சீனிவாசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கூறி ஸ்டான்லி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவமனை காவல்துறை ஆய்வாளர் குமார் பாதிக்கப்பட்டவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,















