சென்னை ஏழு கிணறு பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து ஐந்து வயது சிறுமி சுருதி உயிரிழப்பு.

0
146

ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் கட்டிட தொழிலாளி இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஐந்து வயதில் சுருதிஎன்ற பெண் குழந்தை இவர் சென்னை கொண்டித்தோப்பு டெலிகிராம் தெருவில் கட்டப்படும் கட்டுமான பணி செய்வதற்காக குடும்பத்துடன் வந்து தங்கி கட்டிட பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணனும் அவருடைய மனைவியும் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது கிருஷ்ணனின் ஐந்து வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது வேலையை முடித்துவிட்டு இரவு கிருஷ்ணன் அவருடைய மனைவி குழந்தையை தேடிய போது குழந்தை காணவில்லை அந்த பகுதி முழுவதும் தேடிய போது தண்ணீர் தொட்டியில் சுருதி உள்ளே விழுந்து இறந்து கிடந்தார் இதுகுறித்து ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து எழுகினறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் கொண்டிதோப்பு பகுதியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here