சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சூழூர்பேட்டைக்கு செல்லக்கூடிய மின்சார ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி ஆந்திராவிற்கு விற்பனை செய்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு அடுத்த வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மின்சார ரயிலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது போலீசார் அங்கு வருவதை கண்டவுடன் அரிசி மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு கடத்தியவர்கள் தப்பி சென்று விட்டனர் அந்த மூட்டைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் வடசென்னை பகுதியான கொருக்குப்பேட்டை தண்டையார்பேட்டை புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசிகள் வாங்கி மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றது தெரிய வந்தது,
















