திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இருவர் காயம் ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதி ;

0
227

சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெரு பகுதியில் இன்று மாலை திடீரென ஒரு எருமை மாடு நடந்து சென்ற பெண்ணை கொம்பால் தூக்கி இழுத்துச் சென்ற நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுத்த நிலையில் சுமார் 50 மீட்டர் இழுத்துச் சென்ற நிலையில் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கை கால் மற்றும் சில பகுதிகளில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தக்காயத்துடன் இருந்த நிலையில்அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனை அடுத்து எருமை மாடு பொதுமக்கள் விரட்டியதால் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் மற்றும் இன்னும் சில நடந்து சென்றவர்களை மோதி தள்ளியதுஇதனை அடுத்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் யாரும் இதுவரை வந்து பார்க்காததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்ஏற்கனவே மாநகராட்சி சார்பில் மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை வெளியே விடக்கூடாது என்று அறிவித்துள்ள நிலையில் திருவொற்றியூர் பகுதியில் மாடுகளை சாலையில் மேய விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது எனவே அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here