மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பு

0
305

சென்னை காலடிப்பேட்டை கன்னியப்ப கிராமணி 1வது தெருவில் பிஸ்கெட் (பேக்கரி)செய்யும் தொழிற்சாலை உள்ளது இந்த தொழிற்சாலையில் சுமார் 15பேர் வரை வேலை செய்கின்றனர். இரவு 12 மணி வரை வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையை சுற்றி 100 குடும்பங்கள் வசிக்கின்றன. தொழிற்சாலையில் இருந்து வரும் சத்தத்தினால் தூக்கமின்றி வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பேக்கரியில் இருந்து வரும் தீப்பிழம்புகளால் அடிக்கடி இவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இடத்தில் இந்த கம்பெனிக்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் என்றே தெரியவில்லை.(இண்டஸ்ட்ரியல் ஏரியா) வில் இருக்க வேண்டிய இந்த கம்பெனி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் எப்படி அனுமதி வழங்கினார்கள். இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. முறையான அனுமதி இன்றி இயங்கும் இந்த கம்பெனியை தொழிற்சாலை இருக்கும் இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு ;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here