கோயில் குருக்களை கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சகர்  சந்திரசேகர் ஐயர் மீது  வழக்கு;

0
569

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பெரிய வாணியர் தெரு நடுப்பேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் இக் கோயிலில் கடந்த 23.04.2024 தேதியில் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் அவர்கள் அழைத்தின் பேரில் நான் காசி விஸ்வநாதர் திருக்கோயில் சென்றேன். அப்போது கோயில் தற்காலிக பணியாளர். R.சந்திரசேகர் என்பவருக்கு 72 வயது மேலும் அவ்வப்போது இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் கோயிலுக்கு சரிவர வருவது இல்லை . அதனால் கோவிலில் அன்றாடம் நடைபெறும் காலை மற்றும் மாலை பூஜைகள் சரிவர நடைபெறவில்லை என்பதினால் என்னை அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலின் அர்ச்சகராக G.ராஜேஷ் ஐயர்
ஆகிய என்னை நியமனம் செய்து அதற்கான ஆணையை என்னிடம் வழங்கியும் அதை பெற்றுக் கொண்டு நான் மறுநாள் 24.04.2024 தேதி மாலை 7 மணிக்கு இறை பணியில் இருந்த போது அப்போது உள்ளே வந்த திரு. R. சந்திரசேகர் அவர்கள்G. ராஜேஷ் ஐயர் ஆகிய என்னை பார்த்து ஆபாசமான வார்த்தையில் திட்டியும் ஆபாச வார்த்தைகளில் பேசி நான் உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றும் எனது சட்டையை பிடித்து எனது வலது கன்னத்தின் மீது கையால் அறைந்தார் நான் நிலைதடுமாறி போனேன் தொடர்ந்து என்னை தாக்கினார் அங்கு 10 – 15 பேர் இருந்தார்கள் , அவர்கள் என்னை காப்பாற்றி வெளியே அழைத்து சென்றார்கள் அப்போது R.சந்திரசேகர் மற்றும் உடன் இருந்த நபர்கள் என்னை பார்த்து மீண்டும் இந்த கோயில் பக்கம் வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அனுப்பினார்கள் தயவு செய்து ஐயா அவர்கள் எனது புகாரினை பெற்றுக்கொண்டு என்னை ஆபாசமாக பேசியும் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த R. சந்திரசேகர் மற்றும் இருந்த நபர்கள் சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரி குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் அவர்களிடம் நேரில் வழங்கிய புகார் இத்துடன் உயர்திரு,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கொடுத்த புகார் சம்மந்தமாக விசாரணை நடத்தி எதிரி சந்திரசேகர் ஐயர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவுயிடப்பட்டு முதல் தகவல் அறிக்கை தேதி 22.05.2024 தேதியில் குற்ற வழக்கு பதிவு எண் T.N. P.S. Cr.NO.367 / 2024 பதிவு செய்யப்பட்டது U/s 294 b , 323, 506 (I) மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது இதனால் குடியாத்தம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரும் பக்தர்கள், சிவனாடியார்கள். மங்கையர்கள் பொதுமக்கள் இக் குற்ற செயலை செய்த சந்திரசேகர் ஐயரை பொது மக்கள் திருக்கோயில் புனிதத்தை சீர்குலைத்ததினால் சந்திரசேகர் ஐயர் 72 வயதை கடந்தும் கோயிலை விட்டு வெளியேற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் மேலும் சந்திரசேகர் ஐயர் காவல்துறையால் கைது செய்யபாடமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here