இலக்கியத்தை, இதழியலை, தேச விடுதலையை வளர்த்தெடுத்தது தாமிரபரணி நதிக்கரை
தாமிரபரணி இலக்கியப் பேரவை விழாவில் கணபதி சுப்ரமணியன் புகழாரம்
ஏரல்: தாமிரபரணி நதிக்கரை பல படைப்பு இலக்கியத்திற்கும், இதழி யல் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறது .தேச விடுதலைப் போராட்டத்தை, அதனை முன்னெடுத்த இயக்கங்களின், அதன் தலைவர்களின் தீவிர பங்களிப்பிற் கும் காரணமாக இருந்திருக்கிறது.
அம்மண்ணின் பெருமைகளை, அதன் அறிவார்ந்த இலக்கியங்களை, படைப்பு ஆளுமைகளை போற்றி சிறப்பிப்பது, நமது சமூகக் கடமை யாகும் என தமிழ்நாடு கலை இலக்கி யப் பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் பெ.கணபதி சுப்ரமணியன் வாழ்த்துரைத்து பேசினார்.
தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் படைப்பாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் இதழாளர் இசைக்கும்மணியின் 75 ஆம் அகவை பவள விழா நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஊரில் உள்ள விஸ்வகர்மா கலைவளாகத்தில் மே 18 அன்று நடைபெற்றது.
இதழாளர் இசைக்கும்மணியின் 75 ஆம் அகவைநாளை சிறப்பிக்கும் வகையில் விழா தொடக்க நிகழ்வாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியின் மேனாள் உறுப்பினர் க.இரட்டை முத்து தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வில், “மாலை டோர்ஸ்” நிறுவனத்தின் எம்.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றுப் பேசி னார். கவிஞர் ஏரல்ராஜன் நிகழ்வு களை ஒருங்கிணைத்து நடத்தினார்.
தாமிரபரணி மண்ணின் பெருமை மிகு படைப்பாளர்கள் தேரிக்காட்டு இலக்கியவாதி நாசரேத் கண்ண குமார விஸ்வரூபன் (எ) ஆறுமுகப் பெருமாள், மூக்குப்பீறி கவிஞர் தேவதாசன், இதழாளர் இசைக்கும் மணி மற்றும் கவிஞர் ஏரல்ராஜன் ஆகியோர் பாராட்டப்பட்டு, “படைப்பு ஆளுமை” விருதும், பொற்கிழி பரிசும், நூல்கள் பரிசளித்தும்,பயனாடை அணிவித்தும் தாமிரபரணி இலக்கி யப் பேரவை சார்பாக சிறப்பு செய்யப் பட்டார்கள்.
கணபதி சுப்ரமணியம் வாழ்த்துரைத் பேசியதாவது:
தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் அனைத்துக்கும் முந்தியது ; அதுபோல பல படைப்பு இலக்கியத்திற்கும், இத ழியல் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறது .
தேச விடுதலைப் போராட்டத்தை அதனை முன்னெடுத்த காங்கிரஸ், காங்கிரஸ் சோசியலிஸ்ட் மற்றும் பொதுவுடமை இயக்கங்களின், அதன் தலைவர்களின் தீவிர பங்களிப்புக் கும் காரணமாக இருந்திருக்கிறது.
சிறுகதை நாவல் இலக்கியத்தில் முன்னோடியாக இருந்த அ. மாத வையா, பாரதியார் போன்றவர்கள் தாமிரபரணிமண்ணின் மைந்தர்களே. தமிழ் சிறுகதை வரலாற்றின் முதல் கட்டத்தின் தொடக்க காலத்தவர்கள் இவர்களே.
அதுபோல காங்கிரஸ் பேரியக்கத்தை காமராஜரோடு இணைந்து இருந்து வளர்த்தெடுத்தவர் விருதுநகர் முத்து சாமி ஆசாரி ஆவார். இதே ஏரல் ஊர் அன்றைய காலகட்டத்தில் பொதுவு டைமை இயக்கத்தின் முக்கிய கேந்தி ரமாக இருந்திருக்கிறது.
ஜெயபாண்டிநாடார், முத்துசாமி ஆசாரி, சங்கரசுப்பு ,காளியப்பன் போன்றவர்கள் பொறுப்பேற்று வளர் த்தெடுத்திருக்கிறார்கள். பாத்திரத் தொழிலுக்கு பெயர்போன ஏரல் ஊரில் பாத்திரத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பெரிய அளவில் செயல்பட்டு தொழிலாளர்களை பாதுகாத்து வந்திருக்கிறது.
அந்த பாரம்பரிய தன்மையோடு, இப் போதைய மண்ணின் படைப்பாளிக ளான நாசரேத் ஆறுமுகப்பெருமாள், மூக்குப்பீறி கவிஞர் தேவதாசன் கவிஞர் ஏரல் ராஜன், இதழாளர் இசைக்கும்மணி உள்ளிட்டோர் நமது முன்னோர்கள் அடியொற்றி, சிறுகதை நாவல் கவிதை கட்டுரைகளை படைப் பாக்கி இருக்கிறார்கள். அப்படைப்பா ளர்களை பாராட்டி சிறப்பு செய்விப் பது நமது சமூகக்கடமையாகும் எனப் பேசினார்.
ஆறுமுகப்பெருமாளின் சிறுகதைகள், “தேரியாயணம்” நாவல் ,அவரை சூழ்ந்திருந்த அடித்தட்டு மக்களின் வாழ்வுநிலையை வெளிப்படுத்திய தாக இருக்கிறது. அப்பகுதி மக்க ளோடு வாழ்ந்த இயல்பான வாழ்க்
கையை தத்ரூபமாக பதிவிட்டு இருக் கிறார் என இலக்கிய விமர்சகர் “லோபா” முருகன் பல உதாரணங் களை முன்வைத்துப் பேசினார்.
அறம் சார்ந்த இலக்கியங்களே காலம் தோறும் வாழ்ந்து கொண்டிருக்கின் றன. படைப்பு என்பதும் அறம் சார்ந்த தாக இருக்கவேண்டும்; மனித மாண்பு களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அத்தகைய அறம் சார்ந்த இலக்கியங்களை, இலக்கியப் படைப் பாளிகளை, தாமிரபரணி இலக்கியப் பேரவை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறது எனப் பேரவையின் ஒருங் கிணைப்பாளர் வீர.பாலன் பேசினார்.
தேரிக்காட்டு இலக்கியவாதி ஆறுமுகப்பெருமாள், மூக்குப்பீறி கவிஞர் தேவதாசன் , இதழாளர் இசைக்கும்மணி, கவிஞர் ஏரல்ராஜன் ஆகியோர் படைப்பாளர்கள் சார்பில் ஏற்புரைத்துப் பேசினர்.நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப் பாளர்களுக்கும் பயனாடை அணி வித்து, புத்தகங்கள் வழங்கி சிறப் பிக்கப்பட்டது .முடிவில் தென்கரை மகாராஜன் நன்றி தெரிவித்துப் பேசினார்.
எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,இதழாளர் கள், படைப்பாளர்கள், பேரவையினர் எனப் பலரும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இதழாளர் இசைக்கும்மணி
















