சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி ;

0
356

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை சங்கர் ஜிவால் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தனது அறையில் வழக்கமான அலுவலை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருடைய சொந்த காரில் சங்கர் ஜிவாலை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகேஷ் குமார் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உள்பட உயரதிகாரிகள் விரைந்தனர். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவல் துறை ஆணையராக மாற்றப்பட்டார். சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உள்பட உயரதிகாரிகள் விரைந்தனர். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவல் துறை ஆணையராக மாற்றப்பட்டார். உத்தரகண்ட் மாநிலம் சென்னையில் 108ஆவது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆவார். இவர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல் துறையில் சேர்ந்தார். இவர் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கண்காணிப்பு இந்த நிலையில் திருச்சி காவல் துறை ஆணையராக இருந்த போது பூட்டிய வீடுகளில் திருட்டை தடுக்கும் நடவடிக்கையாக எஸ்எம்எஸ் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையில் 6 ஆண்டுகள் பணியாற்றினார். சங்கர் ஜிவால் போதை பொருள் தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குநராகவும் பணியாற்றிய சங்கர் ஜிவால் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தார். சென்னை காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றவுடன் சங்கர் ஜிவால் பல குற்றங்களை தடுத்தார். துப்பு கிடைக்காத வழக்குகளை முடுக்கிவிட்டு குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். தேனாம்பேட்டையில் சைக்கிளில் ரோந்து சென்ற போது இரு சக்கர வாகனம் மோதி தோள்பட்டை எலும்பு முறிவடைந்து சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி புதிய சைக்கிளை பரிசளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here