பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி;

0
192

இன்று வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்கள் கலந்துகொண்டு 180 மாணவிகளுக்கும் 107 மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டியை வழங்கினார் இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் வரவேற்புரை வழங்கினார்.திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் பணிகளைப் பாராட்டி வாழ்த்து கூறினார் அதேபோல் வந்திருந்த கழக உறுப்பினர்ளை வரவேற்று மகிழ்ந்தார். சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.சங்கர் அவர்கள் பேசும் பொழுது திருவொற்றியூரில் ஒழுக்கம் நிறைந்த பள்ளி என வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை மற்றும் ஆசிரிய பெருமக்களையும் பாராட்டி பேசினார் இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் வி.இராமநாதன் அவர்களும் 14 வது (அ) வட்ட கழக செயலாளர் ஏகா.கார்த்திகேயன்
மாவட்ட பிரதிநிதிகள் பி.எஸ்.சைலஸ் கே.கார்த்திகேயன் முன்னாள் பகுதி துணைச் செயலாளர் இ.ரமேஷ் மாவட்ட சுற்றுச்சூழலின் துணை அமைப்பாளர் பா.பாலஉமாபதி வர்த்தகர் அணி மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சுரேஷ் மேற்கு பகுதி மீனவர் அணி அமைப்பாளர் எஸ்.செல்வம் மேற்கு பகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நிர்மல் தாஸ் கழக நிர்வாகிகள் எம்.தயாநிதி கொள்கை மணி வாழப்பாடி செந்தில் யாபேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here