வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அரசு மதுபான டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட்ட நகர மன்ற உறுப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

0
216

அரசு மதுபான டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட்ட பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம்
குடியாத்தம் அடுத்த நேதாஜி சவுக் பகுதியில் அரசு மதுபான டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது இதனால் இந்த பகுதியில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்த பகுதியில் செல்ல அச்சப்படுவதாகவும் எனவே அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி அந்தப் பகுதி மக்கள் பல்வேறு முறை கோரிக்கை மனுக்களை அளித்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அப்பகுதியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் மற்றும் பெண்கள் உட்பட பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கடையின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் நேதாஜிசவுக் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here