குடியாத்தத்தில் இயங்கி வரும் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என இந்திய குடியரசு கட்சி சார்பில் வலியுறுத்தல்

0
220

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செரு வங்கி மேல்பட்டி ரோட்டில் இயங்கி வருகிறது. தற்பொழுது திடீரென குடியாத்தம் நகரில் இருந்து சித்தூர் செல்லும் வழியில் உள்ள பாக்கம் 6 கிலோமீட்டர் தொலைவில்உள்ள துணை மின் நிலையத்திற்கு மாற்ற முயற்சிக்கின்றார்கள் இந்த கட்டிடம் 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இடமாற்றம் செய்ய உள்ளதாக தெரிகிறது.இது பற்றி செயற்பொறியாளரிடம் கேட்ட பொழுது வேலூர் தலைமை பொறியாளர் உத்தரவுபடி பழைய பாக்கம் துணை மின் நிலையம் பழைய குடியிருப்பு கட்டிடங்களுக்கு மாற்றுகிறோம் என கூறுகிறார். குடியாத்தத்தில் இருந்து பாக்கத்திற்கு ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் ரூபாய் 100 செலவாகிறது ஆட்டோக்கும் குடியாத்தம் பேர்ணாம்பட்டு மாதனூர் கே வி குப்பம் ஆம்பூர் ஆகிய 150 ஒன்றியங்களை கொண்ட சுமார் 15,000 மின் இணைப்புகள் உள்ளன . தற்பொழுதுகுடியாத்தம் நகரின் மையப் பகுதியில் செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. ஒன்றரை லட்சம் வாடிக்கையாளர்களை தங்கள் குறைகள் , பிரச்சினை , விவசாய மின் இணைப்பு, பதிவுகள் இதர பணிகளுக்காக தினமும் குறைந்தது 100 க்கு மேற்பட்டநபர்கள்இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றன. ஏற்கனவே பொது மக்கள் பஸ் மாரி அலுவலகத்திற்கு வருகின்றனர். இடமாற்றம் செய்தால் மேலும் பஸ் அல்லது ஆட்டோ மாறி செல்ல வேண்டும் பெரும் சிரமமும்,செலவும் ஏற்படும். மேலும் இது சம்பந்தமாக இந்திய குடியரசு கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த செயற்பொறியாளர் அலுவலகத்தை மாற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் இடத்தை மாற்றினால் பல்வேறு அமைப்புகள் போராடக் கூடிய நிலை வரும்எனவே நகரத்தில் மின் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி இடம் மாற்றினால் நன்றாக இருக்கும் . மீறி இடமாற்றம் செய்தால் இந்திய குடியரசு கட்சிமற்றும் பல கட்சிகள் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்துவோம். என இந்திய குடியரசு கட்சி சார்பில் வேலூர் மாவட்ட தலைவர் தலித் குமார் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here