1.கங்காதர சுவாமி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும்,
2. குடியாத்தம் நகரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மதுபான கடைகளை முழுமையாக அகற்றிட வேண்டியும்,
3. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு மூலப் பொருட்கள் நூல் எளிதில் கிடைத்திட வழிவகை செய்யவும்,
4. நெசவாளர்களின் கூலி உயர்வை 33 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கிடவும்,
5. குடியேற்றம் கவுண்டனிய மகாநதி குறுக்கே நிரந்தரமான தரை பாலும் அமைத்திட கோரியும்,
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27.03.2023 குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு குடியாத்தம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குடியாத்தம் மேற்கு நகர செயலாளர் எஸ் குமார் வரவேற்பு நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமார் கண்டன உரை நிகழ்த்தினார்.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் குடியாத்தம் வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் வைத்தனர்.
Home Uncategorized குடியாத்தம் பகுதியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்













