சென்னை திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சுதாஜாஸ்மின் இவர் ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார் அப்பொழுது அவருக்கு மாத சம்பளமாக 35 ஆயிரம் ரூபாய் என்று கூறியதாகவும் ஆனால் ஓமன் நாட்டிற்கு சென்ற பிறகு 22,000 மட்டுமே வழங்கப்பட்டதாகவும் மேலும் மிகவும் கடுமையான வேலைகளை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் சுதா ஜாஸ்மின் தனது தாயார் மஞ்சுவிடம் கதறி அழுதுள்ளார்
மஞ்சு இது குறித்து திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரிடம் தனது மகளை மீட்டு தருமாறு கூறியுள்ளார் கே.பி.சங்கர். வடசென்னை எம்.பி டாக்டர் கலாநிதி வீராசாமியிடம் இது குறித்து கூறியுள்ளார் அவரும் உடனடியாக இச்ச சம்பவத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்
பின்னர் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்துள்ளனர் அப்போது அந்த பெண்ணுக்கு அங்கு கொடுமை நடந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து வடசென்னை எம்.பி மற்றும் ஜப்பான் தமிழ் சங்க தலைவர் கணேசன் ஓமன் நாட்டில் உள்ள அந்த பெண்ணை இந்தியாவுக்கு அழைத்து வர அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார் பின்னர் அந்த பெண் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டார்
சென்னை விமான நிலையத்திற்க்கு வந்த சுதா ஜாஸ்மினை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பூங்கொத்து கொடுத்து சால்வை அனிவித்து வரவேற்றனர் சுதா ஜாஸ்மின் தான் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர உதவிய அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்














