தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் கிராமம் இராமாயணத்தில் இடம் பெற்ற புண்ணிய ஸ்தலம்:

0
260

தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிராமம் இராமாயணத்தில் இடம் பெற்ற புண்ணிய ஸ்தலம். ஸ்ரீ ராமன் தன் திருக்கரங்களால் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் ஸ்ரீ வியாஸ ராஜரால் சுமார் 800 வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த ஸ்ரீ வரசித்தி ஆஞ்சநேயர். இங்குள்ள ஆஞ்சநேயரின் வாலில் மணி இருப்பது வியாஸ ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு சான்று. இந்த ஆஞ்சநேயரின் இடுப்பில் சிறிய போர்வாள் உள்ளது. வடக்கு திசை நோக்கி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் வரங்களை அள்ளி தரும் கருணை உள்ளம் கொண்டவராக இருக்கிறார். மேலும் வியாஸ ராஜர் கையால் வரையப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் கிராமம் இராமாயணத்தில் இடம் பெற்ற புண்ணிய ஸ்தலம். திருக்கோயில் கர்நாடக மாநிலம் முளுபாகல் ஸ்ரீ பாதராஜ மடத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலின் பூஜைகள் மத்வ சம்பிரதாய முறைப்படி நடைபெறுகிறது.
ஸ்ரீ ராமன் தன் திருக்கரங்களால் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் ஸ்ரீ வியாஸ ராஜரால் சுமார் 800 வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த ஸ்ரீ வரசித்தி ஆஞ்சநேயர். இங்குள்ள ஆஞ்சநேயரின் வாலில் மணி இருப்பது வியாஸ ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு சான்று. இந்த ஆஞ்சநேயரின் இடுப்பில் சிறிய போர்வாள் உள்ளது. வடக்கு திசை நோக்கி அருள்பாலித்து கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் வரங்களை அள்ளி தரும் கருணை உள்ளம் கொண்டவராக இருக்கிறார். மேலும் வியாஸ ராஜர் கையால் வரையப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.
இத்திருக்கோவில் 2010-ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடம் ஸ்ரீ விக்ஞானநிதி தீர்த்த ஸ்வாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 26/06/2022அன்று ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மட பீடாதிபதி ஸ்ரீ சுஜயநிதி தீர்த்த சுவாமிகளால் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது.
இத்திருக்கோவிலில் வரசித்தி ஆஞ்சநேயர், பீமர், மத்வர், ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் நாகர் சிலைகள் சூழ விநாயகர் உள்ளது.
இத்திருக்கோவிலில் அர்ச்சகராக திரு R.அஞ்சனாபிரசாத் புரோகிதர்.
( A.இராமகிருஷ்ணன்
இராமநாதபுரம் மாவட்ட நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here